இந்தியாவின் 100 சக்தி வாய்ந்த நபர்கள் என்ற பட்டியலை பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரஜினிக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. எனவே இந்தியாவில் அவரை 77 பேர் முந்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் ஐந்து பேர் பெயர்கள் பின்வருமாறு:
1. பிரதமர் நரேந்திரமோடி
2. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா
3. இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா
4. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவாத்,
5. சோனியா காந்தி
இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 78வது இடம் கிடைத்துள்ளது. அவரது அரசியல் வருகை, சிஸ்டம் சரியில்லை என்ற பஞ்ச் டயலாக்கிற்கு கிடைத்த வரவேற்பு, காலா படத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு, அடுத்த எம்ஜிஆர் என மக்கள் அவரை பார்ப்பது ஆகியவையே ரஜினி இந்த பட்டியலில் இணைந்ததற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்டியலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 64வது இடமும், 65வது இடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 66வது இடத்தில் நீடா அம்பானி, 77வது இடத்தில் அமிதாப்பச்சன், 79வது இடத்தில் தீபிகா படுகோனே, 93வது இடத்டில் ஜிக்னேஷ் மேவானி, ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது