சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்துக் கடைகள் அடைக்கப்படும் என்று மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நாளை மருந்துக் கடைகள் அடைக்கப் படும் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை கடை அடைப்பு போராட்டம் வணிகர் சங்க கூட்டமைப்பின் மூலம் நடத்தப் படுகிறது. இதில் மருந்து வணிகர் சங்கமும் பங்கேற்பதாக முன்னர் தெரிவித்திருந்தது.