கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் வினாயகர் சிலை பால் குடிப்பதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒரு வினாயகர் சிலை திடீரென அம்மன் சிலையாக மாறி வருவதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது
சென்னை அருகே உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு சிறிய வினாயகர் கோவிலுள்ள வினாயகர் சிலையின் உருவம் படிப்படடயாக திடீரென அம்மன் உருவமாக மாறி வருகிறது. இதனை அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்
வினாயகர் சிலை அம்மன் சிலையாக மாறி வருவதை பலர் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த மாற்றம் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து ஆன்மீகவாதிகள் விரைவில் விளக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இதுகுறித்து இயக்குனர் மோகன் பதிவு செய்துள்ள டுவீட் இதோ:
இன்று வண்ணாரப்பேட்டையில் அம்மன் முகமாக மாறிய விநாயகர் முகம்…. pic.twitter.com/raW6nQKooE
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 3, 2018