நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கமல் பேசியதாவது:
காவிரி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என சாக்குபோக்கு சொல்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக குழப்பமும் பேராசையும் அதிகரித்துள்ளது. பல நூறு ஆண்டுகளாக காவிரியில் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. காவிரியில் காலம் காலமான நமது உரிமையை அரசியல்வாதிகள் தட்டிப்பறிக்கின்றனர்.
காவிரியில் மத்திய அரசு செய்வது தவறு. மத்திய அரசை அவமரியாதை பேசுவதை நாங்கள் செய்ய மாட்டோம். மீண்டும் கோரிக்கை வைத்து உறங்குவர்களை எழுப்பலாம் உறங்குபவர்களை போல நடிப்பவர்களை எழுப்பவே முடியாது
கலவரங்கள் மூலம் திசை திருப்பினாலும் திசை திரும்பமாட்டோம். காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள்- திசை திரும்பமாட்டோம். காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும்: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது. வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான். தொடையை தட்டுவது வீரம் அல்ல தொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும்
உண்ணாவிரதங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. கெஞ்சும் நிலைக்கு தள்ளியது மத்திய அரசின் முதுகுக்கு பின்னாள் ஒளிந்திருக்கும் தமிழக அரசு
உலகின் பல நாடுகளில் சென்டரிசம் பரவி வருகிறது. ஆசியாவின் சென்டரிசத்தின் முன்னோடியாக ஏன் நாம் இருக்கக் கூடாது? மய்யமாக இருந்தாலும் சேர வேண்டிய நேரத்தில் நல்லவர்களுடன் சேருவோம்
சினிமாவில் அரசியல் செய்ததில்லை. அரசியல் செய்யும் போது நடிக்க மாட்டேன். என்னை விட சிறந்த நடிகர் ஜெயக்குமார். அவர் எனக்கு பொதுஜன விளம்பரதாரராக இருக்கின்றார்.