மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறார். நேற்றைய திருச்சி பொதுக்கூட்டத்திலும் தமிழக அரசை பினாமி அரசு என்றும், மத்திய அரசுக்கு பணிந்து போகும் அரசு என்றும் விளாசினார்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஏற்கனவே அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ள நிலையில் தற்போது அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் பதிலடி கொடுத்துள்ளார்.
கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டு என பூனை நினைப்பது போன்றுதான் கமலின் தாக்கம் இருப்பதாகவும், கமல்ஹாசன் கண்களை விழித்து நோக்கட்டும், சுற்றி இருக்கும் வெளிச்சம் புலப்படும் என்றும் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கள் குறித்து எந்த இடத்திலும் விவாதம் செய்ய தயார் என்றும் அவர் சவால் விட்டுள்ளார். இந்த சவாலை கமல் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்