சென்னை: இன்று (6.2.2015) சூரியன் – பூமி – குரு கிரகம் நேர்கோட்டில் வருவதால், சூரியனுக்கு எதிர்நிலையில் குரு இருக்கும் பட்சத்தில் பூமியின் நிலவு எப்படி பவுர்னமி அன்று தோன்றுகிறதோ அதுபோல் குருகிரகம் முழுவிட்டத்துடன் தெளிவுடன் தோன்றும். தமிழகத்தில் இரவு முதல் விடியற்காலை வரை இதனைக் கண்டு ரசிக்கலாம். குரு கிரகத்தை வெறும் கண்களால் காணலாம். அதன் அழகிய தோற்றம் மற்றும் சந்திரன்களை தொலைநோக்கி அல்லது தரமான பைனாக்குலர் மூலம் காணலாம். வானில் அன்று குரு-நிலவு-மகம் நட்சத்திரம் நேர்கோட்டில் தோன்றும். இதை உலகம் முழுவதும் காணலாம். – இவ்வாறு தாம்பரம் வானவியல் கழகத்தின் பாலு சரவண சர்மா தெரிவித்துள்ளார்.
இன்று வானில் முழு நிலவாய் வியாழன் கிரகத்தைக் காணலாம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari