இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி- சாக்சி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நேற்று மாலை, தோனியின் மனைவி சாக்சி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தோனி கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது நீண்ட நாள் தோழியான சாக்சியை மணந்தார். உலகில் எங்கு கிரிக்கெட் போட்டிகள் நடந்தாலும் சாக்சியும் தோனியுடன் செல்வார். ஆனால், அண்மையில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் சாக்சி உடன் செல்லவில்லை. அப்போதுதான், அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று அவருக்கு குழந்தை பிறந்தது குழந்தையின் எடை 3.7 கிலோ இருப்பதாகவும், தாயும், சேயும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல் வெளியிட்டது. பிப்ரவரி 14ம் தேதி உலகக் கோப்பை தொடங்க இருப்பதை முன்னிட்டு, ஆஸ்திரேலியாவில் தற்போது தோனி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பெண் குழந்தைக்கு அப்பாவான தோனி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories