சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல்!

சென்னை: சென்னையில் வழக்கம்போல் உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோத குண்டர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.

சென்னை: சென்னையில் வழக்கம்போல் உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது சமூக விரோத குண்டர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மூன்று பேர் தங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே திடீரென வந்த சமூக விரோதிகள் சிலர், நீங்கள் தமிழர்கள் இல்லை, ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு இங்கே இடமில்லை” என்று கோஷமிட்ட படி, மூன்று பேர் மீதும் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைகுலைந்து போன மூவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றனர்.

உடனே காவல் நிலையத்தில் அவர்கள் சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டது. இதை அடுத்து நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் காவல் நிலையத்தில் கூடி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.