காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர் அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!

காவலரைத் தாக்கிய நாம் தமிழர் தொண்டர்அடையாளம் தெரிந்தது! கண்டறிய உதவுமாறு வேண்டுகோள்!

சென்னை: ஐபிஎல்., போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நாம் தமிழர் உள்ளிட்ட இயக்கங்கள் நடத்திய போராட்டத்தின் போது, காவலர் இருவருக்கு சரமாரியாக அடி உதை விழுந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர், கடும் கொலைவெறியுடன் காவலர் ஒருவரை குத்துகுத்து என்று குத்தித் தாக்கினார்.

இது குறித்த வீடியோ பதிவுகள் உடனே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதை வைத்தே நடிகர் ரஜினி காந்த், காவலர்களைத் தாக்குவது வன்முறையின் உச்சக் கட்டம் என்று கண்டித்தார்.

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நாம் தமிழர் கட்சியினர் இல்லை என்று சீமான் கூறினார். ஆனால், சம்பவம் நடந்த முதல் நாளில், காவலர் ஒருவர் சீமானைத் தாக்கியதால் கோபம் அடைந்த ஒரு தொண்டரின் எதிர்வினை என்று நாம் தமிழர் கட்சியினரே கூறியிருந்தனர்.

இந்நிலையில், காவல் துறையினர் இந்த நிகழ்வில் சம்பந்தப் பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும், இவர் பற்றிய தகவல் அறிந்தால் உடனே காவல் துறையிடம் தெரிவிக்குமாறு கூறி ஒரு எண்ணையும் அளித்துள்ளனர்.

மோகன் தாஸ், டி1, திருவல்லிக்கேனி காவல் நிலையம், செல் எண்: 98402 91208

என்ற தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளனர்.