
எகிப்தில் நடந்து வரும் சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் காலிறுதியில் இங்கிலாந்தின் லாரா மாசாரோவுடன் மோடிய இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, 0-3 (4-11,8-11, 2-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். இப்போட்டியில் பங் கேற்ற மற்றொரு இந்திய வீராங் கனையான தீபிகா பலிக்கல், தனது முதல் சுற்றில் 10–12, 7–11, 12–14 என்ற செட்களில் பிரான்சின் கேமில் செர்மே விடம் தோல்வி கண்டார்.
சமீபத்தில் நிறைவு பெற்ற காமன்வெல்த் விளையாட்டு தொடரில் ஸ்குவாஷ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் ஜோடி மகளிர் இரட்டையரில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பாவுக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ஊக்க தொகையும் வழங்கப்பட்டது.