காமன்வெல்த் போட்டியில் முன்பு எப்போதும் இல்லாத வெற்றி பெற்றதை தொடர்ந்து, சுவிடனில் வரும் 29 முதல் மே 6-ம் தேதி வரை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இந்திய டேபிள் டென்னிஸ் அணியினர் இரண்டு பிரிவுகளாக அங்கு பயணமாக உள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்கும் ஆண்கள் அணியில் சரத்கமல், சத்தியன், அமல்ராஜ், ஹர்மீத் தேசி மற்றும் சனில் ஷெட்டி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பெண்கள் பிரிவில் மணிக்கா பத்ரா, மௌமா தாஸ், மதுரிக பட்கர், பூஜா சஹாஸ்ரபுட்தே மற்றும் சுதிரட்ட முகர்ஜி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியை 150 நாட்களை சேர்ந்தவர்கள் கண்டு களிக்க உளள்னர். ஒரே இடத்தில 24 டேபிள் டென்னிஸ் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 400 மீடியா பிரதிநிதிகள் பார்வையிட உள்ளனர். இந்த போட்டிகளை டிவியில் 350 மில்லியன் ரசிகர்கள் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.