தொழிலாளர் நினைவு நாள் (Workers’ Memorial Day, International Workers’ Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and Injured) ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் நாள் உலகெங்கும் தமது பணியின் போது கொல்லப்பட்டு, காயமடைந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்கள் நினைவுகூரப்படுகின்றனர்.
இது வேலை தொடர்பான விபத்துகள், நோய்கள் என்பவற்றின் விளைவுகள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும்; தொழில்சார்ந்த பாதுகாப்பு, நலம் ஆகியவை தொடர்பான விஷயங்களை நாடுகள் மட்டத்திலும் அனைத்துலக மட்டத்திலும் செயல்திட்டங்களில் இடம்பெறச் செய்வதற்காகவும்; தொழில்சார் பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பான நாடுகளின் முயற்சிகளுக்கு உதவுவதற்குமே இந்நாள் அறிவிக்கப்பட்டது.