ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகை தமிழகத்துக்கு இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தரவுள்ளார். சென்னை வரும் அவர் வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 2 நாள் பயணமாக சென்னைக்கு வரும் அவர் ஹெலிகாப்டர் மூலம் அன்று வேலூர் செல்கிறார்.
அங்கு வேலூரில் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 4 மணிக்கு வேலூர் தங்கக் கோயிலில் அவர் வழிபாடு நடத்துகிறார். இதைத் தொடர்ந்து ஸ்ரீநாராயணி மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மாலை 6 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார். நாளை சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் பிற்பகல் குருநானக் கல்லூரியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.