பத்திரிகையாளர் சோ ராமசாமி குறித்த தவறான தகவலை வெளியிட்டதற்காக நடிகை குஷ்பு ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
பத்திரிகையாளர் சோ ராமசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சோ ராமசாமி குறித்து வதந்திகள் பரவின. இந்தத் தகவலை உறுதி செய்யாமல், நடிகை குஷ்புவும் வருத்தம் தெரிவித்து தகவல் வெளியிட்டார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், சோ ராமசாமி குறித்துக் கூறி, இரங்கல் தெரிவித்திருந்தார். ஆனால், பின்னூட்டம் அளித்த பலரும் சோ நலமாக உள்ளார் என ரீ- டுவீட் செய்தனர்.
தனது செயலுக்காக குஷ்பு தற்போது டுவிட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், ”சோ ராமசாமி குறித்த ஒரு பதிவை போட்டிருந்தேன். அதை நான் உறுதிப் படுத்தாமல் செய்துவிட்டேன். என் தவறுக்காக நான் ஆயிரம் முறை மன்னிப்பு கேட்கிறேன். அவர் நீண்ட காலம் வாழ வேண்டும்” என்று கூறியுள்ளார்.
I tweeted about #ChoRamasamy avl coz I was sent a link confirming his demise n if this untrue,my 1000 apologies. .may he live a long life.
— khushbusundar (@khushsundar) September 26, 2015