சென்னை: சென்னை மாதவரத்தில் லாரியில் கடத்தப்பட்ட 425 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு அலுமினியம் ஹைட்ரேட்டை ஏற்றிச்சென்ற லாரியில் கஞ்சா கடத்துவதாக வந்த புகாரைத்தொடர்ந்து போலீசார் வாகனசோதனை நடத்தினர்.அப் போது வந்தவழியே வந்த லாரியை மறித்து நடத்திய சோதனையில் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 425 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடத்தில் ஈடுபட்டவர்கள் விருநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துராஜா மற்றும் அப்துல் ரசாக் என்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.