ஐபிஎல் டி-20 போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடந்த போட்டியில் 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி அபார பெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் இஷான் கிஷான் 62 ரன்கள் அடித்தார்.
அதிரடியாக விளையாடி இஷான் கிஷன் 21 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். மேலும் சூர்யகுமார் யாதவ் 36 ரன்கள் மற்றும் ரோகித் 36 ரன்கள் எடுத்துள்ளனர்.