காவிரி வழக்கில் வரும் 14 ஆம் தேதி தமிழகத்திற்க சாதகமான தீர்ப்பு வரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காவிரி வழக்கில் வரும் 14 ஆம் தேதி தமிழகத்திற்க சாதகமான தீர்ப்பு வரும். விவசாயிகள், மக்களின் நலனை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்றும் கூறினார். ரஜினிகாந்த் முதல்வராகவர் என்றும், தமிகழத்தில் ஏற்படுள்ள வெற்றிடத்தை ரஜினிகாந்தால் மட்டுமே நிரப்ப முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்த கருத்து குறித்து கேள்விக்கு பதிலளித்த தம்பித்துரை, ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது எதுவும் நடக்காது, தமிழகத்தில் வெற்றிடம் என்பது இல்லை என்றார்.