’பிரா’வை கழட்டச் சொன்னாங்க… ‘நீட்’ எழுதிய பெண், போலீஸில் புகார்!

என் அருகே நின்றபடி தேர்வு அறைக் கண்காணிப்பாளர் என்னையே கண்காணித்துக் கொண்டிருந்ததால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தேர்வை எழுத இயலவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீட் தேர்வு ; சோதனைகள் (கோப்பு படம்)

நான் அணிந்திருந்த உள்ளாடையை கழட்டச் சொல்லி தேர்வு அறை கண்காணிப்பாளர் தொந்தரவு செய்தார் என்று போலீஸில் புகார் அளித்துள்ளார். நீட் எழுதச் சென்ற ஒரு பெண்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கொப்பம் பகுதி இளம் பெண் ஒருவர், நீட் தேர்வு எழுதச் சென்றுள்ளார். அப்போது அவரை அவர் அணிந்திருந்த உள்ளாடையைக் கழட்டி விட்டு வருமாறு தேர்வு அறைக்கு முன் அனுமதிக்கும் பாதுகாவலர் சொல்லியிருக்கிறார்.

இது குறித்து அந்தப் பெண் மே மாதம் 8ம் தேதி போலீஸில் அளித்த புகார் மனுவில், தேர்வு அறைக்குச் செல்வதற்கு முன்னர், நான் அணிந்திருந்த ‘பிரா’வைக் கழற்றி விட்டு வருமாறு கூறினர். அதில் உலோக ஹூக் இருந்ததால், அது குறித்து சந்தேகம் எழுப்பினர். ஆனால் பின்னர் அனுமதித்தாலும், என் அருகே நின்றபடி தேர்வு அறைக் கண்காணிப்பாளர் என்னையே கண்காணித்துக் கொண்டிருந்ததால், எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் நான் தேர்வை எழுத இயலவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது கேரள மாநிலத்தில் நடந்த சம்பவம் என்பதால், காம்ரேட்கள் சிறப்பாக ஆட்சி செய்கின்றனர் என்றும், ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையில் இப்படி விளையாடிய கம்யூனிஸ்ட் அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்றும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர் சமூக வலைத்தளத்தில்.

இது மிகவும் வருந்தத் தக்க விஷயம். எதற்கெடுத்தாலும் இப்படி குறை சொல்லும் போக்கும் எங்கே கொண்டு போய் முடியப் போகிறதோ என்று சிலர் அங்கலாய்க்கின்றனர்.

தமிழகத்தில் மட்டும்தான் நீட் தேர்வு மாணவியர் தொந்தரவு செய்யப் பட்டார்கள் என்று ஊடகங்களின் கூற்றை மறுக்கும் விதமாக, இப்போது கேரளத்தில் இருந்தும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டு, அங்கே ஊடக விவாதம் ஆகியிருக்கிறது.