பெரம்பலூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு பகுதியில் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்பலி.ஆன சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர்(டிஐஜி) லலிதா லட்சுமி ஆகியோர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, இறந்தவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் உள்ள உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விபத்துக்குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கு காரணமான சக்திசரவணன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.