நெல்லைமாவட்டம் ஆனைகுடியை சேர்ந்தவர் ராக்கெட்ராஜா. இவர் மீது பல்வேறு கொலை, மிரட்டல் வழக்குகள் உள்ளன.
இவற்றில் கைதாகாமல் தலைமறைவாக இருந்தார். நெல்லையை சேர்ந்தவர் கொடியன்குளம் குமார். புதிய தமிழகம் கட்சியில் இருந்தவர், பின்னர் அ,தி.மு.க.,வில் செயல்பட்டார்.
இவர் நிலம் வாங்கிய தகராறில், கொடியன்குளம் குமாருக்கும், ராக்கெட் ராஜாவின் அண்ணன் வக்கில் பாலகணேஷ்க்கும் பகை இருந்ததாக தெரிகிறது.
கடந்த பிப்ரவரி 26ம் தேதி, நெல்லை அண்ணாநகரில் கொடியன்குளம் குமார் வீட்டில் புகுந்த 6 பேர் கும்பல் அவரை கொலை செய்யும் நோக்கோடு வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் தாக்கியது. இதில் கொடியன்குளம் தப்பினார். அவரது மகள் அனுஷியாவின் கணவர் செந்தில்குமார் 26 வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இறந்த செந்தில்குமார், தனியார் இன்ஜினியரி்ங் கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றிவந்தார். அவர் தலித் என்பதால் கொலை வழக்கு குறித்து மனித உரிமை ஆணையம் உள்ளிட்டோர் விசாரித்தனர்.
இதனிடையே இந்த கொலைவழக்கில் இருவர் மட்டும் சரணடைந்தனர். ராக்கெட் ராஜா, அவரது அண்ணன் வக்கீல் பாலகணேஷ், உறவினர் டாக்டர் பாலமுருகன் உள்ளிட்ட 6 பேர் தேடப்பட்டுவந்தனர்.
இந்நிலையில் மே 7 ம் தேதி சென்னை தேனாம்பேட்டை ஹயாத் ஓட்டில் தங்கியிருந்த ராக்கெட் ராஜா உள்ளிட்ட5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் மீது வேறு வழக்குகள் உள்ளன.
எனவே ராக்கெட் ராஜா, கோவை மத்திய சிறயைில் அடைக்கப்பட்டார். இன்று திங்கள்கிழமை காலையில் அவர் கோவை சிறையில் இருந்து போலீசாரால் நெல்லை அழைத்துவரப்பட்டார்.
நெல்லை மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள தீண்டாமை வழக்குகளுக்கான கோர்ட்டி்ல் கடந்த பிப்ரவரி 26 ம் தேதி நெல்லை பாளையங்கோட்டையில் பேராசிரியர் செந்தில்குமார் வெடிகுண்டு வீசி கொலை செய்யபட்ட வழக்கில் 3 வது குற்றவாளியான ராக்கெட் ராஜா கோவை சிறைசாலையில் இருந்து நெல்லை PCR நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரா முன்பு ஆஜர்படுத்தினர். இதையொட்டி நெல்லை கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.