இனவாத கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் ஐ-லீக் சாம்பியன்ஸ் மினர்வா பஞ்சாப் எப்சி உரிமையாளர் ரஞ்சித் பஜாஜ் கால்பந்து விளையாட்டு போட்டி செயல்பாடுகளில் இருந்து ஓராண்டு தடை மற்றும் 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிளப் டைரக்டர் ஹீனா பஜாஜ் தெரிவிக்கையில், ரஞ்சித் தவறாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு தண்டனை வழங்கப்படும் முன்பு சரியாக விசாரிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மினர்வா 18 வயதுகுட்பட்ட இளையோர் லீக் பிளே அப் போட்டிகளின் போது இந்த சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.