ஆறாவது புரோ கபடி லீக் ஏலம் வரும் 30, 31ம் தேதிகளில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் 422 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதுமட்டுமின்றி 58 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் எதிர்கால கபடி ஹீரோ திட்டத்தில் பங்கேற்க 87 வீரர்களும் இந்தியா வர உள்ளனர்.
இந்த ஏலத்தில், ஈரான், பங்களாதேஷ், ஜப்பான், கென்யா, தென் கொரியா, மலேசியா, இலங்கை உள்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 12 அணிகளில், ஒன்பது அணிகள் தங்கள் தங்க வைத்து கொள்ளும் வீரர்களின் பட்டியலை அளித்துள்ளது. மீதமுள்ள அணிகள் விரைவில் தக்க வைத்து கொள்ளும் வீரர்கள் பட்டியலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 வாரங்கள் நடைபெற உள்ள ஆறாவது சீசன் லீக் போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி தொடங்க உள்ளது.