இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணிக்காக 4 லட்ச ரூபாய் நிதியை
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அளித்துள்ளார்.
இதுகுறித்து வீல்சேர் கிரிக்கெட் அணியின் செயலாளர் பிரதீப் ராஜ் தெரிவிக்கையில், வீல்சேர் கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர்ஷிப் மற்றும் நிதி தேவைப்படுவதாக சச்சினுக்கு தான் இமெயில் அனுப்பிருந்தேன். இதற்கு மூன்று நாட்களில் பதிலளித்த சச்சின், 4 லட்ச ரூபாய் நிதியை அளித்தார் என்று கூறியுள்ளார்.
இந்த வீல்சேர் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்றக உள்ளது என்றும், அங்கு சிறந்த முறையில் விளையாட இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.