சுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம்

ஐரோப்பியாவின் அரச குடும்பத்திடம் கடந்த 300 வருடங்களாக இருந்த அரிய வகை நீல வைரம், சுமார் 45 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கோல்கொண்டாவில் இருந்து பெறப்பட்ட இந்த வைரம் 6.1 கேரட் கொண்டாதாகும்.

ஸ்பெயினின் அரசர் பிலிப்பை, இளவரசி எலிசபெத் ஃபர்னீஸ் 1715-ம் ஆண்டு திருமணம் செய்தபோது இந்த நீல வைரம் பரிசாக அளிக்கப்பட்டது.