ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலம் திறப்பு

ரஷ்யாவை கிரீமியாவுடன் இணைக்கும் பாலத்தை ரஷ்ய அதிபர் புட்டின் திறந்து வைத்தார். பாலத்தை வடிவமைத்த பொறியாளர்களுடன் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்த புட்டின் சரக்கு வாகனம் ஒன்றை புதிய பாலத்தின் வழியே ஓட்டிச் சென்று சோதனை நடத்தினார். கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் நூற்றாண்டுக் கால கனவு என்றும் அவர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். கிரீமியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பாலம் உதவும் என்றும் புட்டின் குறிப்பிட்டார்.