இன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: எங்கு தெரியுமா?

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், மேற்கு திசையில் ஏடன் வளைகுடா நோக்கி நகரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னை: இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எந்தப் பகுதியில் எல்லாம் தெரியுமா? இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, தமிழகத்தின் தென் மேற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ளது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும், மேற்கு திசையில் ஏடன் வளைகுடா நோக்கி நகரும் என்றும் கணிக்கப் பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், இன்று தமிழகத்தின் தென் மேற்கு மற்றும் தெற்கு உள் மாவட்டங்களின் சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.