பதவியேற்பு முடிந்தவுடன் பாஜக தலைவர்களுடன் உணவருந்திந்திய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா

பெங்களூரில் பதவியேற்பு முடிந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக தலைவர்களுடன் உணவருந்தினார்

பலத்த சர்ச்சைக்குகளுக்கு இடையே, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றார்.

கர்நாடகத்தில் கடந்த மே 12 ஆம் ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன் தினம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகளின் படி எந்த ஒருக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வென்றது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 2 பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இதைதொடர்ந்து 104 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க விடக் கூடாது என முடிவு செய்த காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்தது. இதையடுத்து, எடியூரப்பாவும், குமராசாமியும் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். சட்ட ஆலோசனைகளை நடத்திய ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். மேலும், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

எடியூரப்பாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து, எடியூரப்பா எந்த வித சிக்கலும் இன்றி 23-வது முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார்.

பெங்களூரில் பதவியேற்பு முடிந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பாஜக தலைவர்களுடன் உணவருந்தினார்