பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? – குமாரசாமி

பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநர் ஏன் எடியூரப்பாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? என்று மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங். மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக மற்றும் அமைச்சர்கள் பணியாற்றுகிறார்கள். எம்எல்ஏக்களை பாதுகாப்பதுதான் எங்கள் திட்டமாகும். மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று திரள வேண்டும் என்றார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்., – பாஜக ஆளுநரின் கேட்டது. சட்ட ஆலோசனைகளை நடத்திய ஆளுநர் வாஜூபாய் வாலா, எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி, உச்ச நீதிமன்றதில் வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற எடியூரப்பா முதல்வராக் தடை விதிக்க மறுத்து விட்டது. இதையடுத்து இன்று காலை அவர் முதல்வராக பதவி ஏற்றார்.

இதை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் கர்நாடக சட்டபேரவை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.