கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்ற எடியூரப்பா, முதல்வராக ஒருபெற்ற பின்னர் இன்று துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பின்னர் கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.

முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா, சட்டசபை கட்டிடத்தில் உள்ள முதல்வர் அறையில் சிறப்பு பூஜை

பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த பூஜைக்கு பிறகு முதல்வர் நாற்காலியில் அவர் அமர உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே 12 ஆம் ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக 104 இடங்களை கைபற்றி தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் ஆளுநரை சந்தித்து கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், தேர்தலில் 78 இடங்களை வென்ற காங்கிரஸ், 38 இடங்களை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் உரிமை கோரியது. இந்நிலையில், பாஜகவை ஆட்சி அமைக்கவும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிருப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்திரவிட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ்- மஜத கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வ்ழ்க்குதிற்கு மாறாக நேற்று நள்ளிரவில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதலவராக தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை எடியூரப்பா, கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார்.

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், காங்கிரஸ்- மஜத தலைவர்கள் சட்டப்பேரவை முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறது,

பிரச்னைகளை காங்கிரசுடன் இணைந்து எதிர்கொள்வோம்.

சட்டப்பேரவையிலிருந்து , ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் செல்வோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநருக்கு எழுதிய கடிதத்தை நாளை காலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.