வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

வால்மார்ட்டுக்கு எதிராக சென்னையில் த.வெள்ளையன் தலைமையில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம் சிறுவணிகர்களின் வாழ்தாவாரத்தையும், வாழ்க்கை முறையையும் சின்னா பின்னாமாக்கி விடும். வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய அனுமதி அளிக்கக்கூடாது. ஆன்லைன் வர்த்தகம் சில்லறை வணிகத்தை அழிக்கும், 10 கோடி பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். வால்மார்ட்-பிலிப்கார்ட் ஒப்பந்தத்தால் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். ஆனால் பல கோடி சில்லரை வணிகர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றார்.