ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி திருச்சியில் தற்போது விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ஆண்டுகள் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில், பம்ப்ஷெட் வசதி உள்ள விவசாயிகள் மட்டுமே குறுவை சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி திறந்துவிடக் கூடிய தண்ணீரானது தாமதம் ஆகிறது. இதனால் டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமானது கேள்வி குறியாகி உள்ள சூழ்நிலைதான் உருவாகியுள்ளது. காலதாமதமாக விடப்படும் தண்ணீரால் விவசாயிகள் நாங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு தள்ளப்படும் நிலைதான் உருவாகியுள்ளது. மேலும் இந்த ஆண்டாவது மேட்டூர் அணையில் இருந்து சரியான நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகே விவசாயிகள் தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.