புதுச்சேரியில் பிளாஸ்ட் பைகளுக்கு முற்றிலும் தடை.

முதல்வருக்கும் எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இல்லை ஆளுநரை சந்திப்பது தனது தொகுதி மக்களின் நலனுக்காகவே

 

புதுச்சேரியில் இன்னும் இரண்டு மாதத்திற்குள் பாலீதீன் பைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்ட உள்ளது என்றும், பாலீதீன் பைகளுக்கு மாற்றாக சுற்று சூழல் பாதிக்காத வகையில் புதிய பைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் முதலமைச்சருக்கும் தனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்றும், மக்கள் நலத்திட்டங்களுக்காகவே ஆளுநர் கிரண்பேடியை தனியாக சென்று தான் சந்திப்பதாகவும், ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடு தற்போது திருப்திகரமாக உள்ளது எனவும் அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.புதுச்சேரியில் முதல்வருக்கும்,ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதால் அமைச்சரின் அதிரடி பேச்சு பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.