விரைவில் கொரியர் சேவையில் டப்பாவாலாக்கள்

மும்பையில் நகரில் உணவுகளை விநியோகித்து வருவதில் பிரபலமாக இருந்து வரும் ‘டப்பாவாலாக்கள்’ விரைவில் தாங்கள் பணிகளுடன் கொரியர் மற்றும் பார்சல்களை டெலிவரி செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய டாப்பாவாலாக்கள் செய்தி தொடர்பாளர் சுபாஷ் தலேகர், நகரில் தற்போது 5000 பேர் இரண்டு லட்சத்திற்கு அதிகமாக டிபன் பாக்ஸ்களை டெலிவரி செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த புதிய திட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க தேவையான நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய திட்டம் தங்கள் உறுப்பினர்களின் வருவாயை உயர்த்தும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்த திட்டம் குறித்து உறுப்பினர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரியர் டெலிவரிக்கு எவ்வளவு சேவை கட்டணம் வசூல் செய்ய வென்றும் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.