நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன்: எடியூரப்பா

நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன் என்றும், ஐந்தாண்டு பதவி காலம் ஆட்சி புரிவேன் என்றும் கர்நாடக மாநில புதிய முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு மக்கள் மற்றும் கட்சியின் ஆதரவு உள்ளது. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் 100 சதம் வெற்றி பெறுவேன் என்றும், ஐந்தாண்டு பதவி காலம் ஆட்சி புரிவேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 12ம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலில், 104 இடங்களை பஜக வென்றது. காங்கிரஸ் 78 இடங்களையும், மஜத 38 இடங்களையும் பிடித்துள்ளது.