‘சாகர்’ (sagar cyclone) புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் என கூறினார். மேலும் பேசிய அவர் ஏடன் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார். சாகர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால், தமிழகத்திற்கு ஏதும் பாதிப்பில்லை என்ற அவர், புயலானது தொடர்ந்து மேற்கு திசையில், ஏமன் நோக்கி நகர்ந்து செல்ல கூடும் என்றார்.