பாகிஸ்தானில் ஜூலை 27ல் பொதுத்தேர்தல்?

பாகிஸ்தான் பொதுத்தேர்தல் வரும் ஜூலை மாதம் 27ம் தேதி நடக்கும் என்று தெரிகிறது. பாகிஸ்தான் அதிபர் மம்நூன் ஹுசைன் இந்த தேதி குறித்து அடுத்த வாரத்தில் அதிகாரபுர்வாமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் தேர்தல் கமிசன் தரப்பு தகவல்களில், பாகிஸ்தான் பொது தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும். இது ஜூலை 28ம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் தேர்தல் தேதியை அறிவிக்க பின்னர் ஏழு நாட்களில் தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட வேண்டும். இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் வாக்குபதிவு மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் ஒழுங்குபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.