எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்ற முதல் நாளிலேயே 4 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்துள்ளார்.

கர்நாடாகவில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக 104 இடங்களை கைபற்றி, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுனரின் கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், 78 இடங்களை பெற்ற காங்கிரஸ், 38 இடங்களில் வென்ற மஜத வுடன் கூட்டணி அமைப்பது ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் உரிமை கோரியது. இந்நிலையில் கவர்னர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்ததுடன், 15 நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை வழக்கத்திற்கு மாறாக இரவு 2 மணிக்கு விசாரித்த உச்சநீதிமன்றம், எடியூரப்பா முதல்வராக தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து இன்று காலை எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றார். மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டார்.