தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விழுப்புரம் மாவட்டத்துக்கு இன்று வருகிறார். அவர் காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வானூர் தாலுகாவில் உள்ள பூந்துறைக்கு செல்கிறார்.
அங்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றுள்ள கிராமப்புற கல்வி மேம்பாட்டு பணிகளை பார்வையிடுகிறார்.
அனைத்தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் கார் மூலம் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு கவர்னர் செல்கிறார்.
அங்கு ஓய்வு எடுத்து கொள்கிறார். பின்னர் அங்கு மாலை 3.30 மணிக்கு மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.