உதகை தாவரவியல்பூங்கா-வில் 122-வது மலர்கண்காட்சி-யை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் 122 வது மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
காய்கறி கண்காட்சி, வாசனை பொருட்கள் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி ஆகியவை முடிந்துள்ள நிலையில், உதகையின் மணி மகுடமாகத் திகழும் தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சி இன்று தொடங்கபட்டது.
1 லட்சம் மலர்களைக் கொண்டு மேட்டூர் அணை, 3500 மலர்களைக் கொண்டு பார்பி டால், 300 கிலோ வாசனை திரவிய பொருட்களைக் கொண்டு வள்ளுவர் கோட்டம் போன்றவற்றின் மாதிரிகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இன்று தொடங்கும் இந்தக் கண்காட்சி 5 நாட்கள் நடைபெற உள்ளது.