வருமானவரி ஊழியர் சம்மேளனம், வருமானவரி அதிகாரிகள் சங்கம் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன.
மத்திய அரசு அலுவலகங்க ளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு ஆன் லைன் மூலம் நடத்தப்படுகிறது. இளநிலை பட்டதாரிகள் இத்தேர்வை எழுத தகுதியானவர்கள். இதை எழுத விரும்புவோர் ஜூன் 4-ம் தேதிக்குள் www.ssc.nic.in இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், வருமானவரித் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. சென்னை முகப் பேர் டி.எஸ்.கிருஷ்ணா நகரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கி ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அனைத்து சனி, ஞாயிறுகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும்.
பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் www.iteftncircle.com என்ற இணையதளத்தில் SSC COACHING CLASS என்ற பகுதி யில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு வெங்கடேசன் (94459 55553), இளங்கோ (9445960115) ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.