தாய்லாந்தின் பாங்காங்கில் தாமஸ் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது.
இந்த போட்டியை தாய்லாந்து முதல் முறையாக நடத்துகிறது. இந்த போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகள் இடம் பெற்றுள்ளன.
கடந்த மூன்று தொடர்களில் பங்கேற்ற இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய காலிறுதிக்கு முன்னேறியது.
இந்தியாவின் பிரணாயி, சமீர் வர்மா மற்றும் லக்ஷியா சென் ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும், தேசிய சாம்பியன்கள் மன் அத்ரி, பி சுமேத் ரெட்டி, இளம் காம்போ அர்ஜூன் எம்.ஆர் மற்றும் ராம்சந்திரன் ஷோலோக் ஆகியோர் இரட்டையர் பிரிவிலும் மோத உள்ளனர்.
இந்த போட்டிக்கான இந்தியா அணியில் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.