Homeசற்றுமுன்தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம்

தூத்துக்குடியில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம்

12 May 22 Kamal - Dhinasari Tamilதூத்துக்குடியில் அமைதியாக போராடிய போதுதெல்லாம் அலட்சியம் காட்சிய அரசுகள். தற்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேருக்கு குண்டு காயம் அடைந்துள்ளனர். 5 பேரில் ஒருவர் நிலைமை கவலைக்கிடம் என தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர். தொடர்ந்து, லுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி செல்வதாக தகவல் தெரிவிக்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். தூத்துக்குடி எம்.எல்.ஏ., கீதாஜீவன் தலைமையில் ஊர்வலம் வந்த சுமார் 200 பேர், நாலாம் கேட் அருகே கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும், நாட்டுப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,156FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,518FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...

Exit mobile version