இந்திய கிரிக்கெட் வீரர்கள் டெண்டுல்கர், மகேந்திர சிங் ஆகியோரின் வாழ்க்கை ஏற்கெனவே திரைப்படங்களாக வெளியாகி பெரும் வரவேற்பினையும் பெற்றது. இந்நிலையில், மற்றொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை சினிமாவாக உருவாக்க இருக்கிறார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, “இப்போதுதான் ஏக்தா கபூரின் பாலாஜி தயாரிப்பு நிறுவனத்திடம் பேசினேன். விரைவில் விவரங்களை கூறுகிறேன்” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari