03/07/2020 2:49 PM
29 C
Chennai

தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் 8 பேர் உயிரிழப்பு, 60 பேர் படுகாயம்

Must Read

மீண்டும் பயன்படுத்தும் வகையில் டயப்பர்கள்!

ஈரத்தால் குழந்தைகளின் உறக்கம் பாதிக்கப்படுவதுடன், சில நேரங்களில் சளி பிடித்து, அதனால் காய்ச்சல்கூட ஏற்பட்டுவிடும்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

பிரதமர் லடாக்கில் ஆய்வு! ராஜ்நாத் சிங் நன்றி!

பாதுகாப்பு அமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப் பட்டாலும், திட்டமிடப்பட்ட லடாக் பயணத்தை தாம் மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி இன்று பயணம் செய்துள்ளார்.

IMG 20180522 175731 e1527004493820 தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் 8 பேர் உயிரிழப்பு, 60 பேர் படுகாயம்

16 May 22 Strilate தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் 8 பேர் உயிரிழப்பு, 60 பேர் படுகாயம்தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். என்றும் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் வி.வி.டி. சிக்னல் அருகே போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், போலீஸ் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.

போலீஸ் வாகனம் சேதப்படுத்தப்பட்டது. வஜ்ரா வாகனத்தை போராட்டக்காரர்கள் விரட்டியடித்தனர். தொடர்ந்து, லுவலகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறி செல்வதாக தகவல் தெரிவிக்கின்றன. அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி எம்.எல்.ஏ., கீதாஜீவன் தலைமையில் ஊர்வலம் வந்த சுமார் 200 பேர், நாலாம் கேட் அருகே கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இதையடுத்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததும், நாட்டுப்படகு மீனவர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பொது மக்கள் 8 பேர் உயிரிழப்பு, 60 பேர் படுகாயம்

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
899FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This