தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறைகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அரசு அமைத்துள்ளது.
ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், தூத்துக்குடி சம்பவம் குறித்து விசாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.