இந்நிலையில், அதுபோன்ற ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் ஹெலிகாப்டர் பயணத்துக்கு டெக்ஸ்வேலி நிர்வாகம் மீண்டும் ஏற்பாடு செய்துள்ளது. இன்று தொடங்க இருக்கும் இந்த ஹெலிகாப்டர் பயணத்துக்கான பயணச்சீட்டு அறிமுகம், விற்பனை தொடக்க நிகழ்ச்சி டெக்ஸ்வேலி வளாகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, டெக்ஸ்வேலி செயல் இயக்குநர் டி.பி.குமார் தெரிவிக்கையில்,
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் கேட்டுக் கொண்டதன்பேரில், கோடை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெக்ஸ்வேலி ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்து உள்ளது. ஒரு முறை பயணம் செய்ய ரூ. 3,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெறும் பயணம் மட்டுமின்றி ஹெலிகாப்டர் குறித்த தகவல்களையும்
மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் வகையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் ஹெலிகாப்டர் பயணம் தினமும் காலை 8 முதல் பகல் 12 மணி வரையும், பிற்பகல் 3.30 முதல் மாலை 6 மணி வரையும் வானில் பறக்கும். அதற்கான டிக்கெட்டுகள் ஈரோடு லோட்டஸ் டி.வி.எஸ். ஷோரூம், மேஜிக் மொபைல்ஸ் ஷோரூம்கள், எஸ்.ஆர்.எம். ஸ்வீட்ஸ், மேட்டுக்கடை யுவபாரதி பள்ளி, டெக்ஸ்வேலியில் கிடைக்கும்.
ஹெலிகாப்டர் பயணம் நடைபெறும் நாள்களில் டெக்ஸ்வேலியில் ஜவுளி, ஆடைகள் வாங்குபவர்களுக்கு, பொருள்களின் மதிப்பின் அடிப்படையில் ஹெலிகாப்டர் பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்றார்.