கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரர் சுனில் நரேன் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பின்னர் வந்த உத்தப்பா மற்றும் நிதீஷ் ரானா 3 ரன்களிலும், லின் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் கொல்கத்தா அணி 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் திரிபாதி – ரஹானே ஜோடி அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 47 ரன்கள் சேர்த்தது. 20 ரன்கள் எடுத்திருந்த போது சாவ்லா பந்துவீச்சில் திரிபாதி ஆட்டமிழக்க. பின்னர் வந்த சஞ்சு சாம்சன், ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் கொல்கத்தா அணியினர் திணறினர்.
சஞ்சு சாம்சன் – ரஹானே ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குலதீப் யாதவின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ரஹானே ஆட்டமிழந்தார். 109 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டும் இழந்து எளிதில் வெற்றி பெரும் நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியினரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் — ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 2-வது குவாலிபயர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.