உள்ளூர் செய்திகள் மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்!

மீண்டும் சர்ச்சையில் ஸ்ரீரங்கம் கோயில்: கருவறைக்குள் காலணி வீசி ‘சைக்கோ’க்கள் அட்டகாசம்!

கிறிஸ்துவர்கள் சிலர் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டது. அப்போதும் கோயில் பாதுகாவலர் உள்ளே அனுப்பிவைத்த விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

-

- Advertisment -

சினிமா:

நாளை முதல்… ஆதித்ய வர்மாவோடு சேர்ந்து வரும் ‘மேகி’

சாய் கணேஷ் பிக்சர்ஸ் சார்பில் ஆர்.கார்த்திகேயன் ஜெகதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் ‘மேகி ’

என்னை வாழவைத்த தெய்வங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்: விருது பெற்ற ரஜினி காந்த்!

மேலும் அவர் "என்னை வாழ தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி! ஜெய்ஹிந்த்!!" என பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பேசி முடித்தார்.

செஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.

இந்த விழாவில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை!

விழாவுக்கான ஏற்பாட்டை நம்பியாரின் மகன் மோகன் நம்பியார், பேரன் சித்தார்த் சுகுமார் நம்பியார் செய்துள்ளனர்.

பிஎஸ்என்எல்.,க்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 7.37 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இதை அடுத்து அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 11.69 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது!

கோலிவுட் or கோழைவுட்?

இவர்களில் ஒருவராவது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் கோலிவுட் எனும் பெயரை கோழைவுட் என மாற்றி வைத்துக்கொள்ளட்டும். பொருத்தமாக இருக்கும்.

வன்கொடுமை சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயல்: விசிக.,வுக்கு கஸ்தூரி பதில்!

எந்த தனி நபரையோ சாதியையோ நான் குறிப்பிட்டு பேசவில்லை என்ற போது, என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பதெல்லாம் அச்சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயலாக உள்ளது

உள்ளாட்சித் தேர்தல்: இப்போது நடக்குமா? அரசியல் சித்து விளையாட்டு!

உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் சித்து விளையாட்டு. புதிய மாவட்டங்களில் வார்டு வரையறை முடிந்த பிறகு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக மனு அளித்துள்ளது.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா? – பாகம் 2 – பஞ்சமி நில அரசியல்

பஞ்சமி நிலத்தை மீட்பதாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி கூறிவருகின்றன. ஆனால், இரண்டு கட்சியினரும் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று தனது வருத்தத்தை பதிவு செய்கிறார் திரு தடா பெரியசாமி...

2021ல் மீண்டும் அதிமுக., ஆட்சி அமையும்! அதையே அற்புதம் என்கிறார் ரஜினி!

2021லும் அதிமுக., ஆட்சியே அமையும். அதையே அதிசயம் நடக்கப் போகிறது, மக்கள் அதிசயத்தை நடத்தப் போகிறார்கள் என்று ரஜினி கூறியிருக்கிறார் எனக் கூறினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ரூ.2000 நோட்டு தடை என்று… எப்டில்லாம் ஏமாத்துறாங்கப்பா! ரூ.78 லட்சம் ‘சுருட்டல்’

சுரேஷ் ஏற்கனவே ஆன்லைன் மோசடியில் கைதாகி சிறையில் இருந்தவர் இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அயோத்தி போராட்டம்: மீண்டும் தலைப்பாகை அணிந்த சூர்யவன்ஷி க்ஷத்ரியர்கள்!

500 வருடங்கள் கடந்த பிறகும் கூட தங்கள் முன்னோர்கள் செய்த சபதத்தைக் காத்து பின்பற்றி வந்தனர்.

டி.ஆர்.பாலுவின் எல்டிடிஈ கருத்து குறித்து மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?

திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் இக்கருத்து குறித்து மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?

காவல் காக்க வேண்டிய நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து… 135 சவரன் ‘அபேஸ்’!

கோவை அருகே வீட்டின் கதவை உடைத்து 135 சவரன் நகை 15 லட்சம் ரூபாய் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை யடிக்கப்பட்டன

மேயர், நகராட்சி தலைவர் என… விருப்பமனு கட்டணத்தை திருப்பித் தருகிறது அதிமுக.,!

எனவே, வழக்குகளால் இந்த முறையும் உள்ளாட்சி தேர்தல் தடைபடுமோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

இன்று… உலக மீனவர் தினம்!

நவ.21 இன்று உலக மீனவர் தினம். இதை முன்னிட்டு பலரும் மீனவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக் விபரீதம்! மிக்ஸியை விற்று சரக்கடித்த கணவன்! கோபத்தில் மனைவி செய்த செயல்!

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வெங்கடேசன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மது போதையில் இருந்த வெங்கடேஷ் வீட்டில் இருந்த மிக்ஸியை விற்று மது குடித்துள்ளார்.

பேஸ்புக்.,கில் ‘லைவ்’வாக விஷம் குடித்த இளைஞர்! காரணம் இதுதான்!

பேஸ்புக்கில் லைவ்வாக இளைஞர் ஒருவர் விஷம் குடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
- Advertisement -
- Advertisement -

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற வைணவத் தலமான ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று காலை உள்ளே புகுந்த கும்பல் ஒன்று, அத்தனை பாதுகாப்புகளையும் கடந்து கோயில் கருவறைக்குள் சென்றுள்ளது. அந்த கும்பலில் ஒருவன், கோயில் அர்ச்சகரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், காலணியை வீசியுள்ளான். இது பக்தர்களிடம் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து, பரிகார பூஜைகளுக்காக கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் கோயிலுக்குள், செருப்பு மற்றும் கத்தியுடன் உள்ளே நுழைந்த சமூக விரோத கும்பலில் ஒருவன் கருவறை அருகே சென்று, அங்கே இருந்த கோயில் அர்ச்சகரை கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், காலணியை எடுத்து கருவறைக்குள் எறிந்துள்ளான். சம்பந்தப்பட்ட நபரை காவலர்கள் பிடித்ததும் அவனுடன் வந்த மற்ற சமூக விரோத கும்பல் தப்பி ஓடியுள்ளது.

கத்தியைக் காட்டி மிரட்டியவனைப் பிடித்து, காவலர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபர் குறித்து விசாரித்தபோது, அவன் பெயர் தர்மராஜ் என்றும், கொத்தனாராக வேலை செய்து வருவதாகவும், திருவிடைமருதூர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தனக்கு காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாத விரக்தியில் இவ்வாறு செய்து விட்டதாகவும் கூறியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று கூறியுள்ளனர்.

ஆனால், இந்தச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த பக்தர்கள், இவ்வாறு செய்துவிட்டு போலீஸில் மாட்டுகிறவர்கள் எல்லாம் எப்படி மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று தெரிவிக்கிறார்கள் என்று சந்தேகம் எழுப்புகின்றனர். இதன் பின்னணியில் ஏதேனும் அமைப்புகள் உள்ளனவா? திட்டமிட்ட ரீதியில் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றி, திசை திருப்ப ஏதாவது முயற்சி நடக்கின்றதா? வாசல் பகுதியில் இருந்து மெட்டல் டிடெக்டர் மூலம் உள்ளே நுழைந்த நபர், கத்தியை வைத்துக் கொண்டு, செருப்பையும் கையில் எடுத்துக் கொண்டு, மூலஸ்தானம் வரை வந்திருக்கிறான் என்றால், கோயில் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர். போலீஸார் என்ன செய்கின்றனர் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்றால் இத்தனை கட்டுக்களையும் மீறி, அதெப்படி மிகக் குறிப்பாக கருவறைக்குள் வந்து செருப்பை வீசி, கத்தியைக் காட்டி மிரட்ட எண்ணம் கொண்டிருப்பான் என்றும், இவ்வளவு தூரம் நினைத்ததை ஒரு கும்பலாக வந்து சரியாகச் செய்தவன் மன நலம் பாதிக்கப்பட்டவனாக இருக்க முடியாது என்றும், இந்த சதித்திட்டத்தை போலீஸார் விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆனால் போலீஸார், அவன் ஒரு சைக்கோ தான் எனவும் அவனுக்கு பின்புலத்தில் எந்த அமைப்புகளும் இல்லை பதட்டமடைய வேண்டாம் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர்.

அண்மையில் தான் கிறிஸ்துவர்கள் சிலர் உள்ளே நுழைந்து பிரார்த்தனை செய்ததாகக் கூறப்பட்டது. அப்போதும் கோயில் பாதுகாவலர் உள்ளே அனுப்பிவைத்த விதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sponsors

Sponsors

Sponsors

Loading...

- Advertisement -

8 COMMENTS

-Advertisement-
-Advertisement-

Follow Dhinasari :

17,954FansLike
171FollowersFollow
713FollowersFollow
14,600SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!

உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

ஆரோக்கிய சமையல்: பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி

குழந்தைகள் கீரைன்னு சொன்னாலே அரை பர்லாங் ஓடுவாங்க அதுவும் கண்ணிற்கு மிகவும் நல்லதான பொன்னாங்கண்ணிக்கீரை சாப்பிடவே மாட்டாங்க.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |

Loading...