படகு கவிழ்ந்ததில் 50 பேர் பலி

காங்கோவில் நள்ளிரவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காங்கோவின் ஈக்வேடர் மாகாணத்தில் உள்ள மான்கோடோ பகுதியில் இருந்து மாபான்டகாவிற்கு புதன்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு மாம்பாயோ ஆற்றில் படகு ஒன்று சென்றது. இதில், 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
நடுஆற்றில் சென்றபோது எதிர்பாராத விதமாக படகு திடீரென கவிழ்ந்தது. இதில் 50 பேர் பலியானார்கள்.