சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 2வது இடத்தில் சென்னை

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டு உள்ளன.

நாடு முழுவதும் 83 புள்ளி ஒரு சதவீதம் பெற்று மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மண்டல வாரியாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் 97 புள்ளி 32 சதவீதம் பெற்று முதலிடத்திலும், சென்னை மண்டலம் 93 புள்ளி 87 சதவீதம் பெற்று 2-வது இடத்தையும் பெற்றுள்ளன.

டெல்லி மண்டலத்தில் 89 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

இந்த ஆண்டு தேர்வு நடைபெற்ற போது, வினாத்தாள் வெளியானதால் மறுதேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது